தோஹாவில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி – மேலும் மூவர் வைத்தியசாலையில்
டோஹாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று விமானப் பண...
https://citynewslivelk.blogspot.com/2015/01/blog-post.html
டோஹாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று விமானப் பணிப்பெண்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மேலும் மூன்று விமான ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (30) இரவு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 218 விமானத்தின் பணிப்பெண்கள் குழுவொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த நாட்டில் பாலைவனப் பயணத்தின் போது ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விமானப் பணிப்பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது குறித்த ஜீப்பில் சுமார் 6 பேர் பயணித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

